இன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான நிலங்களில் இரசாயன உரங்களை பயன்படுத்தி தான் மகசூல் எடுக்கின்றனர். இதனால் நிலத்தில் இரசாயனங்களின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அவற்றை சரி செய்ய சரியான வழி முறைகளை தெரியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இரசாயன உரத்தின் விலையேற்றத்தால் சாகுபடி செலவு அதிகமாகி மீண்டும் எவ்வளவு உற்பத்தி செய்தாலும் சரியான விலை கிடைக்காத காரணத்தால் கடனாளியாக மாறுகின்றனர். தற்போது அனைத்து விவசாயிகள் மத்தியில் நஞ்சு இல்ல உணவு உற்பத்தி செய்யும் மனபக்குவம் வந்து விட்டது. அதற்கான வழி முறைகளை ஆராய தொடங்கி விட்டனர். இதில் ஒன்று பல தானிய சாகுபடி முறை. இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் முதன்முதலாக செய்ய வேண்டியது இந்த பலதானிய விதைப்பு.
தானிய வகை நான்கு : சோளம், கம்பு, தினை, சாமை
பயறு வகைகள் நான்கு : ஊளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு, கொண்டைக்கடலை
எண்ணெய் வித்து பயிர் நான்கு : எள், நிலக்கடலை, சூரிய காந்தி, ஆமணக்கு
பசுந்தாள் உரபயிர்கள் நான்கு : தக்கை பூண்டு. சனப்பு, நரிப்பயறு கொள்ளு
நறுமணப் பயிர்கள் நான்கு : வெந்தயம், சீரகம், கடுகு, கொத் த மல்லி
இவற்றை தேவையான அளவு எடுத்து (அந்த அந்த பகுதியில் கிடைக்க கூடியவைகள்) மழை பெய்யும் காலங்களில் விதைத்து 40-50 நாட்களில் (பூப்பதற்கு முன்) பிடுங்கி மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறாக 2 -3 தடவை செய்தால் அந்த நிலம் இரசாயன பாதிப்பின்றி உயிர் துடிப்புள்ள நிலமாக மாறிவிடும். மண்ணின் கரிம சத்துகளின் அளவு கணிசமான அளவில் கூடும்.
ஹியுமிக் அமிலம் தெளிப்பு : இந்த அமிலமானது பூஞ்சானம் மற்றும் நிலத்தடி நீர் மற்றும் புதை பொருட்களின் சிதைவுகளின் மூலமாக உருவான பல அமிலங்கள் சேர்ந்த கலவை இவற்றை ஒரு எக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் வரை 40 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் முலம் மண்ணின் நுண்ணியிர்கள் உற்பத்தி அதிகரித்து மண் வளமாகும். இந்த அமிலத்தை தெளித்தால் மண்ணில் நீர்ப்பிடிப்பு திறன் அதிகரித்து இறுக்கம் குறையும். எனவே மேற்கூறிய முறைகளை கையாண்டு இரசாயன பாதிப்பில் இருந்து மண்ணை வளப்படுத்த முடியும்.