January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரப்பர் விலையில் முன்னேற்றம்

கன்னியாகுமரி, மே 18

கரோனா முடக்கம் காரணமாக கேரளத்தில் செயல்படாமல் இருந்த ரப்பர் சந்தை கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதை அடுத்து ரப்பர் விலையில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் காணப்பட்டது.

கரோனா காரணமாக கேரளத்தில் இம்மாதம் 8ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ரப்பர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புறம் ஆகிய மாவட்டங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரப்பர் கடைகள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து ரப்பர் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ரப்பர் விலையைத் தீர்மானிக்கும் கோட்டயம் ரப்பர் சந்தை திங்கள்கிழமை செயல்பட்டது. இதையடுத்து ரப்பர் சந்தையில் ஆர்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ.167 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 ரப்பரின் விலை கிலோ ரூ.164 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோ ரூ.149.50 ஆகவும் இருந்தது.

கோட்டயம் ரப்பர் சந்தையில் ரப்பர் விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Spread the love