January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக ரூ.50 வரை வசூலிக்க ரயில்வேமுடிவு-ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை

புது தில்லி, ஜன.10

ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க முடிவு செய்யப் பட்டிருப்பதால் ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாடு முழுவதும் 50 க்கும் அதிகமான முக்கிய ரயில் நிலையங்களை தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, விமான நிலையங்களைப் போல ரயில் நிலையங்களிலும் பயணிகளிடம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

மேலும், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போரிடம் டிக்கெட் கட்டணத்துடன் தலா ரூ.10 கூடுதலாக பெற ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவுப் பெட்டிகளில் 2ம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி பயணிகளிடமும் முதல் வகுப்பு பயணிகளிடமும் கட்டணத்துடன் ரூ.25 கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட முன்பதிவுப் பெட்டிகளில் பயணிப்போருக்கு தலா ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும். அத்தகைய ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் என்றால் மேம்பாட்டு நிதியாக பாதி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பயணி புறப்படும் இடமும் இறங்கும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் என்றால் 1 புள்ளி 5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக 2 நிலையங்களுக்கும் தலா ரூ.50 ரூபாய் மேம்பாட்டு நிதி என்றால், அந்த நிலையங்களை பயன்படுத்தும் பயணி ரூ.100 ரூபாய்க்கு பதில் ரூ.75 செலுத்த வேண்டும். இதுமட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்துடன் கூடுதலாக ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love