October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாமில் 732 நபர்கள் ஆலோசனை பெற்றனர்

நாமக்கல், அக்.13

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பரிசோதனைகளை பார்வையிட்டார்.

பின்னர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமில் கலந்து கொண்ட 732 நபர்களுக்கும் எடை உயரம் ஆகியவை அளக்கப்பட்டு இரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. கண் பரிசோதனை 42 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு 5 நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

அதிநவீன எக்ஸ்ரே கருவி கொண்டு 22 நபர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனையும் கர்ப்பிணித்தாய்மார்கள் 94 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் நீரிழிவு நோய் கண்டறிய இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை 106 நபர்களுக்கும்; இ.சி.ஜி பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் தேவைப்பட்ட நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும். எனவே பொதுமக்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்களில் தங்களுக்கு தெரிந்த உடல்நலம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் கலந்து கொள்ள செய்து பயன்பெறவேண்டும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Spread the love