ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலின் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மே 4 அன்று இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய சியோமி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதுள்ள கோவிட் 19 நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்டேட்டான மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC சிப்செட் புராஸசருடன் செயல்படும் எனத் தெரிகிறது.
5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.