சி20ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை ரியல்மி நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியிடப்படும் என்று ரியல்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரியல்மி சி20ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி34 எஸ்ஓசி சிப்செட் புராஸசரில் இயங்கக்கூடியதாக இருக்கும். 6ஜிபி ரேம் திறனையும், 5000 எம்ஏஎஎச் பேட்டரி திறனையும் கொண்டிருக்கும் என்றும், இதர தொழில்நுட்ப அம்சங்களும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love