July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் என்னெ்ன அம்சங்கள் இருக்கிறது?

ஜிடி நியோ மாடல் ஸ்மார்ட்போனை சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் தொடர்பாகப் பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 2400 x 1080 பிக்சல் துல்லியம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120:9 திரைவிகிதம் கொண்ட அமோஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இந்த மொபைலில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி உள்ளது. அத்துடன் ஒரு மெமரிகார்டு ஸ்லாட் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி புராஸசருடன் ரியல்மி UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

இதில் பின்புறம் 64எம்பி பிரைமரி சோனி IMX682 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அத்துடன் முன்புறம் 16எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 16 நிமிடங்களில் 50 சதவிகித அளவுக்கு சார்ஜ் செய்ய முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை, டால்பி ஆடியோ ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

Spread the love