August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசிாயவில் விற்பனைக்கு வந்தது

புதிய நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடலை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக மலேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட இதர சந்தைகளிலும் விரைவில் நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 1080 x 2400 பிக்சல் துல்லியம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவைப் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தில் செயல்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளது. ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் வண்ணங்களில் இந்த மாடல் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி B&W portrait கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறம் 16எம்பி செல்ஃபீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.14,150-ஆக உள்ளது.

Spread the love