புதிய ரியல்மி8 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 28-ம் தேதி ஃபிளிப்கார்ட் மற்றும் realme அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 1,080×2,400 பிக்சல் துல்லியம், 20:9 திரைவிகிதம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ் திறன் கொண்ட டிஸ்பிளே உள்ளது.
மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் புராஸசர் மற்றும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு திறனுடன் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் செயல்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட் இடம்பெற்றுள்ளது.
இந்த மொபைலின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி மோனோகுரோம் சென்சார் என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு நைட்ஸ்கேப், 48எம் மோட், புரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் தரப்பட்டுள்ளது.
சூப்பர்சோனிக் பிளாக் மற்றும் சூப்பர்சோனிக் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
இந்த 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.14,999-ஆகவும், மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.16,999-ஆகவும் உள்ளது.