May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடு 21 சதம் அதிகரிப்பு: ஜேஎல்எல் நிறுவனம்

புது தில்லி, ஏப்.29

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடு, 21 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என ஜேஎல்எல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, ஜேஎல்எல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனங்களின் முதலீடு, கிட்டத்தட்ட ரூ.6,915 கோடியாக அதிகரித்து உள்ளது.

இது, இந்திய ரியல் எஸ்டேட் துறை மீதான அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிறுவன முதலீட்டாளர்கள், குடியிருப்பு பிரிவில் செய்துள்ள முதலீடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் செய்யப்பட்ட முதலீடு, ரூ.555 கோடியாக இருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில், ரூ.435 கோடியாக குறைந்து விட்டது. ஆனால், அலுவலக கட்டட சந்தையில், வரவு, கடந்த ஆண்டில், ரூ.3,788 கோடியாக இருந்தது, இப்போது, ரூ.6,480 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஹைதராபாத்தில் தான் அதிக முதலீடுகள் வந்துள்ளன. மதிப்பீட்டு காலத்தில் வந்த முதலீடுகளில், 42 சதம் இங்கு வந்துள்ளது. மும்பையில், 21 சதம் வந்துள்ளது. ஆனால் கோவிட் பாதிப்பு காரணமாக, ஜூன் காலாண்டில் இந்த வளர்ச்சியை எதிர்பார்க்க இயலாது. இவ்வாறு ஜேஎல்எல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love