August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரிவர்ஸ் டிரைவிங் கியருடன் டிஏஓ 703 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் நீடிக்கும் நிலையில், வாகன ஓட்டிகளின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு பிரபல நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த டிஏஓ ஸ்டார்ட்அப் நிறுவனம் டிஏஓ 703 என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் உள்ளிட்ட சில இ-ஸ்கூட்டர்கள் பிரபலமாக உள்ளன.

பிரீமியம் பிரிவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் விலை விவரம் வெளியிடப்படவில்லை.

டிஏஓ 703 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம்-அயனி-பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பிஎல்டிசி மோட்டாரில் 3.5 kW ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. ஃபுல் சார்ஜில் 100கிமீ வரையில் இயங்கக்கூடிய இந்த இ-ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

9 இன்ச் எல்சிடி திரையைப் பெற்றுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் டிரைவிங் கியர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் ஸ்விட்சிற்கு பதிலாக, ஸ்மார்ட்டான ரிலீஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், தெஃப்ட் அலெர்ட், ஸ்கூட்டர் இருப்பிடத்தை அறியும் வசதி போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன.

முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் ஷாக்குகளும் உள்ளன. வாகனத்தை நிறுத்தவதற்கு டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன.

பேட்டரி பொருத்தாத ஸ்கூட்டரின் மொத்த எடை 85 கிலோ. வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் இள நீலம் ஆகிய நிறங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love