May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.1000க்கு விற்கும் நூர்ஜகான் மாம்பழம் பற்றிய தகவல்

முக்கனியில் முதல் கனியான மாங்காயில் நூற்றுக்கணக்கான ரகங்கள் இருந்தாலும்கூட இந்த நூர்ஜஹான் ரகம் அவ்வுளவு சிறப்புமிக்கது. இனிப்பான சுவை, அதிக சதை பற்று தெவிட்டாத இனிப்பு கலந்தது. ஒரு மாம்பழத்தின் எடை 3.75 கிலோ முதல் 4 கிலோ எடை கொண்டது. இதன் தாயகம் ஆப்கானிஸ்தான். தற்போதை மத்திய பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் பயிடப்பட்டு வருகின்றன.

ஒரு கிலோ ரூபாய் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. ஜனவரி, பிப்ரவரியில் பூத்து ஜூன் மாதத்தில் அறுவடைக்கு வரும். அதற்குள் அலைபேசி வாயிலாக விற்பனைக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. தற்போதைய பருவகால மாற்றத்தால் அதிக அளவாக பூக்கள் உதிர்ந்து குறைவான மாங்காய்கள் உற்பத்தியாகின்றன. மாங்கொட்டையின் அளவு 350 கிராம். மா பழங்களின் இராணியாக இந்த ரகம் உள்ளது என்பது மிகையல்ல. பொதுவாக மாம்பழங்களை விரும்பி உண்ணும் நபர்களுக்கு இது ஒரு அரிய வகையான பழம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love