July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.1,002 கோடி லாபம் ஈட்டியது பஜாஜ் ஃபைனான்ஸ்

மும்பை, ஜூலை 22

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.1,002 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஜாஜ் ஃபைனான்ஸ் நடப்பு 2021-22ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக மொத்தம் ரூ.6,743 கோடி வருவாய் ஈட்டியது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.6,650 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.4 சதவீதம் அதிகமாகும்.

ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.962 கோடியிலிருந்து 4.2 சதம் உயர்ந்து ரூ.1,002 கோடியானது. மதிப்பீட்டு காலாண்டில் நிகர வட்டி வருமானம் ரூ.4,152 கோடியிலிருந்து 8 சதம் அதிகரித்து ரூ.4,489 கோடியானது.

2021 ஜூன் 30 நிலவரப்படி நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 15 சதம் வளர்ச்சி கண்டு ரூ.1.59 லட்சம் கோடியை எட்டியது. இது, 2020 ஜூன் 30 காலகட்டத்தில் ரூ.1.38 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த வாராக் கடன் 1.40 சதத்திலிருந்து 2.96 சதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடனும் 0.50 சதத்திலிருந்து 1.46 சதமாக உயர்ந்துள்ளது என பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ் காலாண்டு நிதி நிலை அறிக்கையானது அதன் துணை நிறுவனங்களான பஜாஜ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸியல் செக்யூரிட்டீஸ் முடிவுகளையும் உள்ளடக்கியது.

Spread the love