January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.12 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

ஈரோடு, மே 7

சூரியகாந்தி விதை ரூ.12 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.12 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் போனது.

இவ்வார ஏலத்துக்கு கருங்குளம், பொருளூர், எருதப்பம்பட்டி, கோபி, பொன்னிவாடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 31 விவசாயிகள் 17,910 கிலோ எடையுள்ள சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, காங்கயம், முத்தூர், நடுப்பாளையத்திலிருந்து 6 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.

ஒரு கிலோ ரூ.64.51 முதல் ரூ.71.06 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.68.91. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்து 500 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் தெரிவித்தார்.

Spread the love