October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.250 கோடி நிகர மதிப்புள்ள நிறுவனம் சில்லரை எரிபொருள் விற்பனை உரிமம் கேட்டு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு

புது தில்லி, அக்.11

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெட்ரோல் – டீசல் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎன்ஜி மற்றும் மின் வாகன சார்ஜிங் வசதிகளை அமைப்பதற்கு புதிய தாராளமய பெட்ரோல் நிலைய உரிம நடைமுறை அனுமதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பெட்ரோல் – டீசல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிலையங்களிலேயே, புதிய தலைமுறை எரிபொருள்களான சிஎன்ஜி, என்என்ஜி அல்லது மின் வாகன மின்னேற்றி நிலயங்களை அமைக்கலாம்’ என்று தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல்-டீசல் எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் சில்லறை விற்பனையகங்களில் ஏதாவதொரு புதிய தலைமுறை எரிவாயு நிலையத்தை அமைப்பது கட்டாயம்’ என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், இந்த புதிய தலைமுறை எரிபொருள் நிலையங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும், அதனை தெளிவுபடுத்தும் வகையில், புதிய தாராளமய பெட்ரோல் நிலைய உரிம நடைமுறையை மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. அந்த நடைமுறையின்படி, குறைந்தபட்சம் ரூ.250 கோடி நிகர மதிப்புள்ள எந்தவொரு நிறுவனமும் பெட்ரோல்-டீசல் சில்லரை விற்பனை உரிமம் கேட்டு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு புதிதாக தொடங்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் – டீசல் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎன்ஜி, மின் வாகன மின்னேற்றி நிலையங்களை அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் புதிய நடைமுறை அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love