May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.26 ஆயிரம் கோடிக்கு எஸ்பி எனர்ஜியை கைப்பற்றியது அதானி

மும்பை, மே 19

ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் எஸ்பி எனர்ஜி நிறுவனத்தை கெளதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் நிறுவனம் மொத்தமாகக் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்த நிறுவனத்தைக் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சுமார் 3.5 பில்லியன் டாலர் அதாவது ரூ.26,000 கோடிக்கு மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

எஸ்பி எனர்ஜி இந்தியாவில் சுமார் 4 மாநிலங்களில் சுமார் 4,954 மெகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்றல் மூலம் கெளதம் அதானி 2025ஆம் ஆண்டுக்குள் 25 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத் தயாரிக்கும் ஒரு நிறுவனமான இருக்கும்.

எஸ்பி எனர்ஜி தனது நிறுவனத்தை ஏப்ரல் மாதமே விற்பனை செய்யத் திட்டமிட்டது, கனடா பெஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு நிறுவனத்துடன் இந்நிறுவனத்தை விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட காரணத்தால் கனடா நிறுவனம் பேச்சுவார்த்தையில் இருந்து மொத்தமாக ஏப்ரல் 17ஆம் தேதி வெளியேறியது.

இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக எஸ்பி எனர்ஜி நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த கெளதம் அதானியின் அதானி கிரீன் வென்றுள்ளது.

Spread the love