புது தில்லி, மே 15
கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தில் இருந்து வந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, கோவிட் தொற்று பரவால் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறின.
இதனால் டேட்டா பயன்பாடு மற்றும் வாய்ஸ் கால்ஸ் சேவையானது மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அண்மையில், டிராய் தரவின் படி, கடந்த பிப்ரவரி மாதத்த்தில் பிஎஸ்என்எல் தவிர, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் உள்ளதை காண முடிந்தது.
இந்நிலையில், இந்த வளர்ச்சியினை அப்படியே தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நிறுவனங்களும், பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் வெறும் 279 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டாவுடன், 4 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் சலுகையுல் வழங்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. அதோடு வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை, தினசரி 100 எஸ் எம் எஸ் என பல சேவைகள் கிடைக்கும். இவற்றுடன் 4 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் சேவையும் கிடைக்கும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இதில் ஆயுள் காப்பீடிற்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. எனினும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லும். இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவும் இலவசமாக கிடைக்கும். எனினும் டேட்டா வரம்பு குறைந்ததும் இணைய வேகம் குறையும்.