May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ 33.40 லட்சம் மதிப்பிலான தங்கம்: சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல்

சென்னை, ஏப்.20

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக், 30, மற்றும் முகமது அப்பாஸ் முஸம்மில், 20, ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது அவர்களது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பொட்டலங்களில் (தலா இரண்டு) தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், எமிரேட்ஸ் விமானத்தில் கழிவுகளை கொட்டும் பகுதியில் மேலும் ஒரு பொட்டலத்தில் தங்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஐந்து பொட்டலங்களில் இருந்து ரூ 33.40 லட்சம் மதிப்பிலான 687 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைப்பெற்று வருவதாக செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Spread the love