June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.40.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

நாமக்கல், ஜூன் 2

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 40.77 ½ குவிண்டால் எடை கொண்ட 11,097 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.69க்கும், குறைந்த விலையாக ரூ.22.15க்கும், சராசரி விலையாக ரூ.24.55-க்கும் என்று ரூ.95,012க்கு விற்பனை ஆனது.

அதேபோல் 165.68 ½ குவிண்டால் எடை கொண்ட 376 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.19க்கும், குறைந்த விலையாக ரூ.83.05க்கும், சராசரி விலையாக ரூ.84.05க்கும் மற்றும் 2ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.95க்கும், குறைந்த விலையாக ரூ.70.89க்கும், சராசரி விலையாக ரூ.77.89க்கும் என்று ரூ.13,37,129க்கு விற்பனை ஆனது.

254.80 குவிண்டால் எடை கொண்ட 343 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.110.79க்கும், குறைந்த விலையாக ரூ.97.49க்கும், சராசரி விலையாக ரூ.101.99க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.112.59க்கும், குறைந்த விலையாக ரூ.94.42க்கும், சராசரி விலையாக ரூ.109.42க்கும் என ரூ.26,31,765க்கும், தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.40,63,906க்கு விற்பனை ஆனது.

Spread the love