January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.4,100 கோடி நிதியை திரட்டும் ஐஓபி

சென்னை, மே 14

மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.4,100 கோடி மூலதனத்தை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஐஓபி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்து நிதியை திரட்ட ஐஓபி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் பங்குதாரர்களிடமிருந்து சிறப்பு பொதுக் குழு கூட்டம் வாயிலாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டில் மத்திய அரசுக்கு மொத்தம் 246,54,23,932 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. பங்கு ஒன்றின் விலை ரூ.16.63 என்பதன் அடிப்படையில் இந்த வெளியீட்டின் மூலமாக ஐஓபி ரூ.4,100 கோடி மூலதனத்தை திரட்டிக் கொள்ளவுள்ளது. இந்த மொத்த தொகையில் ரூ.2,465.42 கோடி பங்கு மூலதன கணக்கிலும், ரூ.1,634.58 கோடி பங்கு பிரீமியம் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டையடுத்து வங்கியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 95.84 சதத்திலிருந்து 96.38 சதமாக அதிகரிக்கும் என ஐஓபி தெரிவித்துள்ளது.

Spread the love