May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.49 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் இலவசமாக வழங்கும் ஏர்டெல் நிறுவனம்

புது தில்லி, மே 18

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் பல்வேறு அருமையான திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

இந்நிலையில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ரூ.49 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் இலவசமாக வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பாவது: இந்த கோவிட் காலத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகையை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். அதாவது ரூ.49 மதிப்புடைய ரீசார்ஜ் கூப்பன், குறைந்த வருவாய் உடைய 5.5 கோடி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த ரீசார்ஜ் கூப்பன் ஆனது 100எம்பி டேட்டா, 38 ரூபாய் டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் ரூ.79 கூப்பன் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்த சலுகை வாயிலாக, ரூ.270 கோடி மதிப்பிலான பலன்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Spread the love