September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை, செப்.13

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் அறிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான திங்கள்கிழமை, சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அதன்படி, ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒருமாத காலமாக 51 விதமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வுகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Spread the love