October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரூ.69 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு, அக்.13

ஈரோடு மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும், இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் சூரியகாந்தி விதை மற்றும் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று முன்தினம் 150 விவசாயிகள் 78,659 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், மூலனூர், ஈரோடு, காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.104க்கும், குறைந்தபட்சமாக ரூ.73க்கும், கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.69 லட்சத்து 36 ஆயிரத்து 433க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Spread the love