May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரெட்மி கே10 கேமிங் எடிசன் மொபைல் ஏப்.27ல் சீனாவில் அறிமுகமாகிறது

ரெட்மி கே10 கேமிங் சப்போர்ட் மாடல் வரும் ஏப்.27ம் தேதி சீனாவில் றஅறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெய்போ தளத்தில் இதுதொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே சீரிஸ் மாடல்களில் இந்த ஸ்மார்ட்போனும் இணைய உள்ளது.

ஸ்லிம் பெசல்கள் மற்றும் நடுப்பகுதியில் பஞ்ச் ஹோல் கட்அவுட் அமைப்புடன் இந்த மாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய மொபைல் ரெட்மி கே10 கேம் என்ஹேன்ஸ்ட் எடிசன் எனக் குறிப்படப்படுகிறது.

டியுவி ரெய்ன்லேண்ட் தரச் சான்றுடன் 5ஜி தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்புறம் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இந்தப் பேனலில் மேலேயும் கீழேயும் லைட்கள் இருக்கும் என்றும், கேமிங் மோட் ஆன் செய்யப்படும் போது இந்த லைட்கள் ஆன் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

பக்கவாட்டில் உள்ள ஸ்லைடர் சுவிட்ச்களை ஆன் செய்தால் கேமிங் மோட் ஆன் ஆகும் எனத் தெரிகிறது. மற்ற கே10 சீரிஸ் மொபைல்கள் போன்று கேமரா பேனலுக்கு அடுத்த படியாக ஃபிளாஷ் பேனல் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப் படுமா என்பது தொடர்பான தகவல் எதுவும் தற்போதைக்கு இல்லை.

இதனிடையே ரெட்மி கே40 மற்றும் கே40 புரோ பிளஸ் மாடல்கள் ஏப்.23ம் தேதி எம்ஐ11 மற்றும் எம்ஐ 11எக்ஸ் புரோ என்ற பெயர்களில் அறிமுகமாக உள்ளது.

Spread the love