September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரெட்மி கே40 கேமிங் சீரிஸில் புரூஸ் லீ ஸ்பெஷல் எடிஷன்

புதிய ரெட்மி கே 40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போன் சீரிஸில் புரூஸ் லீ ஸ்பெஷல் எடிசன் என்ற பெயரிலும் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கேமிங் எடிஷன் சீரிஸில், ரிட்ராக்டபிள் ஷோல்டர் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இதில் மூன்று மைக்குகள், டால்பி அட்மோஸ் சப்போர்ட் மற்றும் ஜேபிஎல் ஆடியோ போன்ற அம்சங்கள் உள்ளன.

ரெட்மி கே 40 கேமிங் எடிஷனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.23,000 ஆக உள்ளது. அதேபோல், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.25,300 ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்ட் விலை சுமார் ரூ.27,600 ஆகவும், இறுதியாக 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை சுமார் ரூ.31,100 ஆகவும் உள்ளது.

இந்த மொபைல் பிளாக், சில்வர், வைட் மற்றும் புரூஸ் லீ ஸ்பெஷல் எடிஷன் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. புரூஸ் லீ ஸ்பெஷல் எடிசன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது. இந்தப் புதிய புரூஸ் லீ ஸ்பெஷல் ரெட்மி கே 40 கேமிங் போனின் இந்திய மதிப்பு ரூ.32,300 ஆகும்.

ரெட்மி கே 40 கேமிங் பதிப்பிற்கான முன்பதிவு மற்றும் விற்பனை ஏப்ரல் 30 முதல் விற்பனைக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.67 இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் தெளிவு, 1,080 x 2,400 பிக்சல் துல்லியம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதத்தைப் பெற்ற HDR10 பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. MIUI 2.0 சப்போர்ட் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 சிப்செட் புராசஸருடன் இயக்கப்படுகிறது.

பின்புறம் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறம் 16எம்பி செல்ஃபீ ஷூட்டரும் உள்ளது.

67W ஃபாஸ்ட் கேமிங் சார்ஜ் வசதியுடன் 5065 mAh பேட்டரி உடன் வருகிறது. IP53 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது.

Spread the love