May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் வரும் 18ம் தேதி முதல் விற்பனை

சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே நோட் 10 சீரிஸில் நோட் 10, நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் போன்ற மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது நோட் 10எஸ் சாதனத்தை ரெட்மி அறிமுகப்படுத்தி உள்ளது.

ஷேடோ பிளாக், ஃபிராஸ்ட் ஒயிட், டீப் சீ புளூ ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அத்துடன் 20:9 திரைவிகிதம், 1100 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் புராஸசர், மாலி-ஜி76 3EEMC4 GPU வன்பொருளுடன் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் செயல்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

Hi-Res ஆடியோ டூயல்-ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் போன்ற அம்சங்களும் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.14,999-ஆகவும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.15,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் மே 18-ம் தேதி இந்த சாதனம் அமேசான், mi.com ஆகிய இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது.

Spread the love