புதுக்கோட்டை, மார்ச் 28
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரத்தில் காரைக்குடி சேது பாஸ்கரா வோளண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற களப்பணி பயிற்சி பெறுவதற்காக அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.பாஸ்கரனின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி ரெத்தினக்கோட்டை கிராமத்தில் தங்கி முகாமிட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக ரெத்தினக்கோட்டை கிராமத்தில் மாணவிகள் லீனா ரெத்தினவதி, சத்யபாமா, சௌமியா, கீர்த்திகா, ராஜாத்தி, மற்றும் டீனாரேஷ்மி ஆகிய மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பயிர் விதைகளுக்கு பவுடர் மற்றும் திரவ உயிர் உரங்கள், உயிரியல் மற்றும் பூஞ்சாணம் முறையில் விதை நேர்த்தி செய்வது, விதையை கடிதப்படுத்தலின் முக்கியத்துவங்கள் குறித்து விளக்கமளித்து செயல்விளக்கங்கள் செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்கள். மேலும் உயிர் உரங்களை பயன்படுத்துவதால் மண் மற்றும் தாவரங்களில் ஏற்படும் பயன்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
Spread the love