May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரெனோ கைகர் காரின் விலை உயர்வு

சென்னை, மே 4

ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த 1ந் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

ரெனோ கைகர் எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களானது ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படவில்லை.

ரெனோ கைககர் எஸ்யூவியின் விலை உயர்த்தப்பட்டாலும், சாதாரண பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் மற்றும் டர்போ பெட்ரோல் மாடலின் சிவிடி வேரியண்ட்டுகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது.

ரெனோ கைகர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ரெனோ கைகர் காரில் 4 ஏர்பேக்குகள், எஞ்சின் இம்மெர்பைலைசர், ரியர் வியூ கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. ரூ.5.45 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து ரூ.9.72 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love