September 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரெனோ 6 புரோ, புரோ + ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் கசிந்தது

விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் ரெனோ 6 புரோ மற்றும் புரோ+ ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த சாதனங்களின் பதிவு விவரங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளதால் விரைவிலேயே இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 6 சீரிஸில், ஒப்போ ரெனோ 6, ரெனோ 6 புரோ, ரெனோ 6 புரோ+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

Oppo Reno 6 Pro மற்றும் Oppo Reno 6 Pro+ சிறப்பம்சங்கள் டீனா இணையதளத்தில் கசிந்துள்ளது. டிப்ஸ்டர் தகவலின்படி ஒப்போ ரெனோ 6 புரோ மாடல் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி புராஸசரின் மூலமும், ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி புராஸசர் மூலமும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் எனத் தெரிகிறது.

ரெனோ 6 புரோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் டிஸ்ப்ளே உடன் 1,080×2,400 பிக்சல் துல்லியம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய அம்சங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் வளைந்த விளிம்பைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு ஸ்மார்ட்போனிலும் மேற்புற இடது மூளையில் பஞ்ச் கட்அவுட் வசதியுடன் செல்ஃபீ கேமராவைக் கொண்டுள்ளது.

65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட டூயல் 2200 எம்ஏஎச் பேட்டரிகளைக் கொண்டிருக்கும் எனவும் டிப்ஸ்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love