புது தில்லி, ஏப்.21
கோவிட் தொற்று சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.
மத்திய அரசின் தலையீட்டினை தொடர்ந்து பல்வேறு மருந்து நிறுவனங்கள், ரெம்டெசிவிரின் விலையை கணிசமாக குறைத்துள்ளன என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மான்டவியா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
முன்னணி மருந்து நிறுவனங்களான, கெடில்லா யஹல்த்கேர், டாக்டர் ரெடீஸ் லேப், சிப்லா, மைலன், சைன்ஜின் இன்டர்நேசனல், ஹீட்டரோ யஹல்த்கேர் ஆகிய மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கோவிட் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.