June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரொக்கப் பணம் கையிருப்பு அதிகரிப்பு ஆர்பிஐ தரவுகள் அறிக்கை

புது தில்லி, மே 5

கோவிட்டை முன்னிட்டு, மக்களிடையே ரொக்க கையிருப்பு அதிகரித்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்பிஐ-யின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல், 23ம் தேதி நிலவரப்படி, மக்களின் கைகளில் ரொக்கப் பணம் இருப்பு, ரூ.29.07 லட்சம் கோடியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலும், செய்தியாவது: கோவிட் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மக்கள், கைகளில் ரொக்க பணத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

மார்ச், 26ம் தேதி நிலவரப்படி இது, ரூ.28.59 லட்சம் கோடியாக இருந்தது. ஒரு பக்கம், டிஜிட்டல் வாயிலான பணப் பரிவர்த்தனை அதிகரித்து வந்த போதும், மக்களிடையே ரொக்க பரிவர்த்தனையும் தற்போது கோவிட் தொற்று பரவலால் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், முதல் நான்கு வாரத்தில் மட்டும், ரூ.57,800 கோடி பணத்தை மக்கள் எடுத்துள்ளனர்.

மேலும், ஏடிஎம் போன்றவற்றிலிருந்து பணத்தை எடுப்பது அதிகரித்து வருகிறது. ஜன் தன் யோஜனா ஏடிஎம், வாயிலாக பணம் எடுப்பது அதிகரிப்பதுடன், டெபாசிட்தாரர்கள் எடுத்த பணம் மீண்டும் வங்கிக்கு வரவில்லை என்கிறார்கள், ஏடிஎம், ஆப்பரேட்டர்கள். மேலும் இதன் காரணமாக, பணம் புழக்கத்துக்கு வராமல், முடக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலுக்கு முன், ஏடிஎம் வாயிலாக, சராசரி ரொக்க பணம் பெறுவது, ரூ.4,000 ஆக இருந்தது. அது தற்போது, ரூ.4,500 ஆக அதிகரித்துள்ளது. ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களிடம் டெபிட் கார்டு இருப்பதால், அவர்களில் பெரும்பாலானோர், அவர்கள் கணக்குக்கு பணம் வந்த உடனேயே அதை எடுத்து விடுகிறார்கள் என்கின்றனர் என வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரொக்க பணத்துக்கான தேவை தற்போது அதிகரித்திருப்பதால், ஏ.டி.எம்., மையங்களின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, ஏ.டி.எம்., ஆப்பரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Spread the love