June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரோஜா

ரோஜா முனி பற்களுள்ள சிறகமைப்புக் கூட்டிலைகளையும், இளம் சிவப்பு நிற நறுமண மலர்களையும் கொண்ட கூரிய வளைந்த முள் நிறைந்த, நேராக வளரும் குறுஞ்செடி. மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய் புண் குறையும். குடிநீராக வைத்து ரணங்களை கழுவி வரச் சதை வளர்வது ஆறும். 20 கிராம் முதல் 10 கிராம் வரை பூவை குடிநீராக்கி வடிகட்டி பால் சர்க்கரை கூட்டி அருந்த வாத பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் வைக்க குல்கந்து ஆகும். காலை, மாலை 10 கிராம் சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப் போக்கு, பேதி, பித்த நோய், வெள்ளை தீரும். நீடித்துச் சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love