கரூர், மே 8
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்தூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஊரடங்கு காரணமாக காலை முதல் மண்டி திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. பூவன் தார், ரூ.150, கற்பூரவள்ளி, ரூ.200, ரஸ்தாளி, ரூ.250க்கு விற்பனையானது.
Spread the love