October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

லெமன்கிராஸ்

லெமன்கிராஸ் – எலுமிச்சைப்புல், இஞ்சி புல் என்று அழைக்கப்படும். இது ஒரு புல் வகையைச் சார்ந்தது. எலுமிச்சம் நறுமணமும், இஞ்சியின் நறுமணமும் கலந்தால் போல் இதன் வாசம் உண்டு. இதன பயன்களை பொறுத்தமட்டில், லெமன்கிராஸ் செரிமானத்தைக் கொடுத்து பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால் மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியது. பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் வியாதிக்கும், தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பயன்படுகிறது. கேன்ஸர் செல்களை அழிக்கும் தன்மை உண்டு. உடல் எடை குறைக்க, மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் டீ தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். லெமன் டீ அருந்தினால் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பி முடி உதிர்வை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க லெமன் டீ பயன்படுகிறது.

ASNசாமி ஆதனூர்.9442311505

Spread the love