August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வங்கிகள் வழங்கிய கடன் 5.33 சதம் அதிகரிப்பு: ஆர்பிஐ

மும்பை, ஏப்.28

கடன் மார்ச் 27- ஏப்ரல் 9 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வங்கிகள் வழங்கிய 5.33 சதம் அதிகரித்து ரூ.152.15 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020 ஏப்ரல் 10ம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.103.38 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.137.15 லட்சம் கோடியாகவும் இருந்தன.

இந் நிலையில், கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டைக் காட்டிலும் 5.33 சதம் அதிகரித்து ரூ.152.15 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 10.94 சதம் அதிகரித்து ரூ.152.15 லட்சம் கோடியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், 2020 ஏப்ரல் 10ம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் ரூ.103.38 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.137.15 லட்சம் கோடியாகவும் இருந்தன என ஆர்பிஐ அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

Spread the love