September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வங்கி கணக்கு விவரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம்: ஆர்பிஐ எச்சரிக்கை

மும்பை, செப்.14

வாடிக்கையாளர் விவரங்களை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் தற்போது மோசடிகள் அதிக அளவில் நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்கள் எதையும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் பெயரில் தற்போது அதிக அளவில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று பண மோசடி நடப்பதாக ஆர்பிஐ-க்கு பெருமளவில் புகார்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட ஆர்பிஐ அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி கணக்கு எண், இணையதள வங்கிச் சேவை விவரங்கள், கார்டு குறித்த தகவல்கள், பின் நம்பர், ஓடிபி உள்ளிட்ட எந்த தகவல்களையும் வாடிக்கையாளர்கள் போன், எஸ்எம்எஸ், இமெயில் உள்ளிட்ட எந்த வழியிலும் அடையாளம் தெரியாத மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளகூடாது என தெரிவித்துள்ளது.

அதேபோன்று, கேஒய்சி புதுப்பிப்பதற்காக வரும் இணைப்புகளை வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய கூடாது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Spread the love