August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வடகிழக்கு பருவமழையால் நெல் விளைச்சல் அதிகரிப்பு

சிவகங்கை, மே 7

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ததால், நெல் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து 30,000 டன் நெல் கொள்முதல் செய்தனர்.

வேளாண் விற்பனை மையங்களான சிவகங்கையில் அழகுமெய்ஞானபுரம், காளையார்கோவில் பகுதியில் விட்டனேரி, திருப்புத்தூர் ஆகிய 3 இடங்களில் நெல் கொள்முதல் செய்தனர். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தனர். நெல்லை கொள்முதல் செய்ததற்கான ரசீது வழங்கியும், இதுவரை அதற்கான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.

இது குறித்து, அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கூறுகையில், பிப்ரவரி மாதம் நெல்லை கொள்முதல் செய்து ரசீது வழங்கினர். ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.40,000 வரை வரவு வைக்க வேண்டும். ஆனால், இன்று வரை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது, அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. பணம் வந்ததும் விரைவில் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், என்றார்.

Spread the love