October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வடகிழக்கு பருவமழையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு

செங்கல்பட்டு, அக்.11

செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கோவிட் 19 தொடர்பு பணிகள், நேரிடை நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் பணிகளை ஆய்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலவலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கானொளி காட்சி மூலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கி கூறினார். இதனைத் தொடர்ந்து கீரப்பாக்கம், ஒரகடம், நத்தம் கரியச்சேரி, தத்தலூர் கிராமங்களி்ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட் கிராம தொகுப்பை எச்சூர் கிராமத்தில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரசு கிடங்கு மற்றும் நெல் அரவை நிலையத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்திட அறிவுறுத்தினார். அதுமட்டுமில்லாமல் நெல் கொள்முதலுக்கு தேவையான கோணிப்பைகள், தார்பாய்களை இருப்பில் வைத்துக்கொள்ளவும் கொள்முதலுக்குரிய நிதித் தொகையினையும் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுமாறு அறிவுரை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல் மற்றும் அறுவடையாகவுள்ள நெல்லினை மழையினால் பாதிக்கப்படாதவாறு பாதுகாத்து மற்றும் அதன் தரத்தில் எந்தவித குறைபாடுகளும் இன்றி கொள்முதல் செய்திட கேட்டுக் கொண்டார். மேலும் ஆய்வின் போது நெல் பயிரிடும் விவசாயிகள் பயிர் சுழற்சியாக நெல்லினை தொடர்ந்து பயறு வகைப் பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள், பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு மண்வளத்தை காக்கும் உத்திகளை தெரிவித்தார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்கநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், வேளாண்மை உதவி இயக்குநர்கள், காட்டாங்கொளத்தூர் மற்றும் திருக்கழுக்குன்றம், தோட்டக்கை உதவி இயக்குநர்கள், வேளாண் பொறியியல் துறை, வரவாய் துறை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love