May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வடகிழக்கு மாநிலங்களில் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சகம் நடவடிக்கை : ஜித்தேந்திரா சிங்

புது தில்லி, மே 4

அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும், ஆக்ஸிஜன் ஆலைகள் உட்பட கொவிட் தொடர்பான கட்டமைப்பை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருவதாக வடகிழக்கு பகுதி மேம்பாட்டு இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

திங்கள்கிழமை நடந்த ஆய்வு கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் ஒரு ஆக்ஸிஜன் ஆலை அமைக்கப்பட்டதாகவும், இதர மாநிலங்களின் தொலை தூர பகுதிகளிலும், இதே போன்ற ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 5 ஆக்ஸிஜன் வேன்களை ரூ. 5 கோடி செலவில் வாங்கும் அருணாச்சலப் பிரதேச அரசின் திட்டம் குறித்தும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலிக்கிறது.

கோவிட்டுக்கு எதிரான நடவடிக்கைக்காக, வடகிழக்கு மாநிலங்களுக்கு, ஒருங்கிணைந்த நிதியாக ரூ.25 கோடி வழங்கப்பட்டது என்றும், இது பல மருத்துவமனைகளில் முக்கியமான கருவிகள் வாங்க உதவியாக இருந்ததாகவும் ஜித்தேந்திரா சிங் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் எங்கேயும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் பல மாநிலங்களில் கூடுதல் இருப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்தாண்டு, ஊரடங்கின் ஆரம்ப காலத்திலே வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்தாண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கொவிட் பாதிப்பையும் பொருட்படுத்தாமல், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் ஜித்தேந்திர சிங் கூறினார்.

Spread the love