சேலம், மார்ச் 16
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் காட்டுத்தோட்டம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்திற்காக தங்கி அம்மாப்பேட்டை வட்டாரத்தில் விவசாயிகளை சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வடபாதி கிராமத்தில் வசிக்கும் மக்களுடன் இணைந்து கிராமப்புற வளங்களை மதிப்பீடு ஆய்வு செய்தனர்.அக்கிராமத்தின் சமூகவரைபடம், வள வரைபடம், காலக்கோடு, வெண் வரைபடம், ஆகியவற்றை மக்களிடம் கேட்டறிந்து வரைந்தனர்.இதில் வடபாதி கிராம ஊர்மக்கள் மற்றும் விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இம்முறையின் மூலம் கிராமத்தின் வளத்தைப் பற்றியும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது என மாணவிகள் தெரிவித்தனர்.
Spread the love