August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வணிக ரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி

ஈரோடு, ஜூலை 15

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முகாசி அனுமன் பள்ளி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் தலா 40 விவசாயிகளுக்கு வணிக ரீதியான நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

துமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்சி நிலையத்தை சார்ந்த விஞ்ஞானி கிருபாகரன், நாட்டுக் கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் மற்றும் தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் மற்றும் கோழிகளுக்கு குறைந்த செலவில் தீவனங்கள் தயாரிப்பு மற்றும் வளர்ப்பு இடங்களை பராமரிப்பது குறித்தும் பயிற்சி அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பிரதீப் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களைப் பற்றி விளக்கினார்கள். தொழில் நுட்ப மேலாளர்கள் விஜயகுமார், மஞ்சுரேகா, நவீனபாரதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Spread the love