July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை கடும் சரிவு

சென்னை, ஏப்.21

கரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கரோனா

பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருமங்கலம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்தும்

நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும்

ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு அமல் ஆகி விடும் என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து

அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி குவித்து வைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக காய்கறி மளிகை மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர் மாறாக பொது மக்கள் அதிகம்

பயன்படுத்தும் காய்கறிகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக திருமங்கலம் மார்க்கெட் மற்றும் இதர பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக 60 சதவீதத்துக்கும் மேலாக

காய்கறி விலை வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் அதிகளவு விலை குறைந்த காய்கறிகளை வேனில் ஏற்றி வீதி வீதியாகச் சென்று வியாபாரிகள் கிடைத்த அளவிற்கு லாபம் என்கிற அளவில் விற்பனை செய்து வருகின்றனர். முழு

ஊரடங்கு முன்பு காய்கறிகள் விலை குறைந்து இருப்பதாகவும் விரைவில் உச்சத்தைத் தொட்டு விடும் என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், பீன்ஸ், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் விலை மிகவும் குறைந்து இருப்பதாகவும், இந்த நிலை தொடருமேயானால் கரோனா சமாளித்து விடலாம்

என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டதால் இன்று காலை காய்கறி விலை குறைந்து காணப்பட்டாலும் வாங்குவதற்கு பொதுமக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love