June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை சரிவு

கரூர், ஏப்.29

கர்நாடகா மாநிலத்தில் இருந்து, பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து இல்லாததால், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ, ரூ.80 முதல் ரூ.100 வரை என உயர்ந்தது. அதேபோல், சின்ன வெங்காயம் விலையும் ஒரு கிலோ, ரூ.100ஐ தாண்டியது. இந்நிலையில், தமிழகத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்ட நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து, கரூருக்கு வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் முதல் தர சின்ன வெங்காயம், ரூ.40, ஈரப்பதம் உள்ள வெங்காயம், ரூ.30 முதல் ரூ.35க்கு விலை குறைந்துள்ளது. அதேபோல், பெரிய வெங்காயம் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கரூருக்கு கொண்டு வரப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம், ரூ.25 முதல் ரூ.30க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை படிப்படியாக குறைந்துள்ளதால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Spread the love