June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வருடம் முழுவதும் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

மதுரை, ஜூன் 2

நெல் விவசாயம் மூலம் மட்டுமே ஒரு விவசாயி தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நிலை உகந்ததாக அமைவது இல்லை. விவசாயத்தோடு கால்நடைகளை வளர்த்தல், தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்து, அதன் தொடர்புடைய மண் புழு உரம் தயாரிப்பு, காளான் உற்பத்தி, சாண எரிவாயு உற்பத்தி, தேனீ வளர்ப்பு மற்றும் மரப்பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் ஒன்றினை ஒன்று சார்ந்து மறு சுழற்சி செய்வதன் மூலம் வேளாண் மற்றும் பண்ணைக்கழிவுகளை சிறந்த முறையில் பயன்படுத்த ஏற்பட்டதே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். தேவையான பண்ணைக்கருவிகள் உபயோகம், மேம்படுத்தப்பட்ட மீன் இனங்களான திலேப்பியா உற்பத்தி, பட்டுப்புழு மற்றும் மல்பெரி வளர்ப்பு ஆகியவைகளை சரியான விகிதத்தில் உபயோகிப்பதின் மூலம் வருடம் முழுவதும் வருமானம் பெறுவதோடு வாழ்க்கைத் தரமும் உயர்வது நிச்சயம். இந்த ஒருங்கிணைந்த பண்யை பயிற்சியானது வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக மதுரை மேற்கு வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 2.6.22 அன்று சின்னப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு இரா.வளர்மதி, வேளாண்மை உதவி இயக்குநர், மதுரை மேற்கு, இரா.பாரதி, துணை வேளாண்மை அலுவலர், மதுரை மேற்கு, சுமதி, கிராம நிர்வாக அலுவலர், சின்னப்பட்டி, கர்ணன், தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வரும் குறுவை சாகுபடிக்குத் தேவையான தொழில் நுட்பங்களை விவரித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை ந.கதிரவன், உதவி வேளாண்மை அலுவலர், ராஜசேகர், வட்டாத் தொழில்நுட்ப மேலாளர், பாலமுருகன், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love