January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1.44 லட்சம் கோடி ரீபண்ட்

புது தில்லி, டிச.23

நடப்பு நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோருக்கு இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் இதுவரையில் வரி செலுத்தும் 1.38 கோடி பேருக்கு ரூ.1,44,328 கோடி வருமான வரி ரீஃபண்டாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2021 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திரும்ப வழங்கப்பட்ட ரூ.20,451.95 கோடியும் அடங்கும். வரி செலுத்தும் 99.75 லட்சம் பேருக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கு டிசம்பர் 21ம் தேதி வரையில் 4 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

வருமான வரி ரீஃபண்டாக 1,35,35,261 நிறுவனங்களுக்கு ரூ.49,194 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி ரீஃபண்ட் பிரிவில் 2.11 லட்சம் பேருக்கு ரூ.95,133 கோடி வழங்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை இதுவரை 4 கோடி பேர் மின்னணு முறையில் தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 லட்சத்து 77 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் கொரோனா தொற்று சூழலைக் கருதி டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Spread the love