August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வரும் ஐந்து நாட்களுக்கான சேலம் மாவட்ட வானிலை அறிக்கை

சேலம், மே 11

சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.விஜயகுமார் கூறியதாவது,

வரும் ஐந்து நாட்களுக்கு (12.05.2021 முதல் 16.05.2021 வரை)

 சேலம் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41oC ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25oC ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 7 முதல் 25கி.மீ ஆக வீசக்கடும்.
 தமிழ்நாட்டில் மழை அளவானது இந்த வாரம் (12.05.2021 முதல் 16.05.2021 வரை) சராசரியை விட அதிகமாக பொழிய வாய்ப்புள்ளது (1.60மி.மீ. லிருந்து 3.47மி.மீ.)
 காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் வாழை மரங்கள் மற்றும் கரும்பு மற்றும் இதர பயிர்களுக்கு முட்டு கொடுத்தல் (விட்டம் கட்டுதல்). இதனை கடைபிடிப்பதால் பயிர்களின் சேதத்தினை தடுக்கலாம்.
 எள்ளு பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயினை தவிர்ப்பதற்கு ஸ்ட்ரெப்டோசைக்ளின் 500 பிபிஎம் மருந்தினை 120 கிராம்/ஏக்கர் என்ற அளவில் தெளிக்கவும்.
 ஆமணுக்கில் காய்த் துளைப்பானை கட்டுப்படுத்த ப்ரோபெனோபோஸ் 50 EC மருந்தினை 500 மி.லி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
 மா பயிரில் மாங்கொட்டைத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அகற்றிவிட வேண்டும். பூக்கள் மலராத பருவக் காலத்தில் பூச்சி மருந்தை நேரிடையாக மரங்களின் அடியில் தெளிக்கவும்.
 நிலவக்கூடிய வானிலையின் காரணமாக தக்காளியில் வெள்ளை ஈ-யின் தாக்கம் அதிகம் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஓட்டும் பொறியை எக்டருக்கு 12 என்ற வீதம் வைத்து கட்டுப்படுத்தவும்.
 மரவள்ளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ப்ரோபனோபோஸ் 50 EC @ 2 மிலி /லிட்டர் அல்லது தியாமேதாக்சாம் 25 WG @ 0.6 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்
 வரும் வாரங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புள்ளதால் பூச்சி கொல்லி அல்லது களைக்கொல்லி மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கவும்.

கால்நடைகளைப் பொறுத்தமட்டில்
 கறவை மாடுகளில் கன்று ஈனுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இருந்து சுண்ணாம்புசத்து உள்ள தீவனத்தை குறைவாக அளித்தும், கன்று ஈன்றவுடன் 10-15 நாட்களுக்கு அதிக சுண்ணாம்பு சத்துள்ள தீவனத்தை அளிப்பதன் மூலம் பால் சுரம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
 தற்போது பொழிந்த மழையின் காரணமாக மாடு தொழுவத்தில் மற்றும் மாடு காட்டும் இடங்களில் ஈரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாடி நோய் வர வாய்ப்புள்ளது. எனவே கட்டு தரைகளை உலர்வாகவும், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Spread the love