October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வரும் 10ம் தேதி புதிய தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை, அக்.6

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (7ம் தேதி) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அக்.8ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அக்.8ல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அக்.9ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அக்.10ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அக்.10ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Spread the love