September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வருவாய் ஆவண சொத்து விவரங்கள் திருத்துவது நிதிசார் விவகாரங்களுக்கு மட்டுமே பொருந்தும்-உச்சநீதிமன்றம் தகவல்

புது தில்லி, செப்.11

மாநகராட்சியின் வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்கள் குறித்த பெயர் திருத்த நடவடிக்கை நிதிசார்ந்த விவகாரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சொத்துகளுக்கு உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: குறிப்பிட்ட சொத்து ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குக் கைமாறும்போது அது குறித்த விவரங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆவணங்களில் மாற்றப்பட வேண்டும். “மியூடேசன்’ என அழைக்கப்படும் இந்த நடைமுறையால் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வரி வசூல் நடவடிக்கைகள் எளிதாகும். மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட நபரின் உயில் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு வருவாய் ஆவணங்களில் பெயரை மாற்றுவதற்கு ரேவா துணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்த உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கையில், “”மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்களை மாற்றுவதால் மட்டுமே அந்த சொத்துக்கு சம்பந்தப்பட்ட நபர் உரிமை கோர முடியாது. வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்கள் மாற்றப்படுவது வரி வசூல் உள்ளிட்ட நிதிசார் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது.

சொத்தின் மீதான உரிமையை தகுந்த சிவில் நீதிமன்றமே முடிவு செய்யும். சொத்தின் உரிமை குறித்த பிரச்னைகளுக்குத் தகுந்த நீதிமன்றத்தையே அணுக வேண்டும். இதேபோன்ற விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Spread the love