June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வறட்சியை தாங்கி வளர விதையை கடினப்படுத்துதல்

விதை கடினப்படுத்துதல் என்பது கட்டுபடுத்தபட்ட நீரேற்றம் மூலம் விதையை வறட்சியை தாங்கி வளரும் நிலைக்கு உட்படுத்துவது.

செய்முறை
• விதைகளை தேவையான நீர் அல்லது இரசாயனக் கரைசலில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைக்க வேண்டும்.
• பிறகு விதைகளை எடுத்து நிழலில் ஊறவைத்து பழைய ஈரப்பததிற்கு திரும்ப கொண்டு வர வேண்டும்.
• ஒவ்வொரு பயிருக்கும் விதைக் கடினப்படுத்துதலின் தொழில்நுட்பம் வேறுபடுகின்றது.

நன்மை பயக்கும் விளைவுகள்
• இது முளைப்பு மற்றும் முளைப்பு சதவீதத்தை அதிகரிக்கிறது.
• நாற்று தோன்றுவதில் சீரான தன்மை.
• விதைப்பு வீரியத்தை அதிகரிக்கிறது.
• வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
• சிகிச்சையளிக்கப்படாத தாவரங்களை விட கடினப்படுத்தப்பட்ட தாவரங்கள் மிக விரைவாக குணமடைகின்றன.
• உப்புத்தன்மை மற்றும் வறட்சிக்கு எதிர்ப்பைத் தூண்டுகிறது.
• நீண்ட காலத்திற்கு அதிக வெப்பநிலையுடன் கூடிய விதைகள்.
• பூக்கள் சற்று முடுக்கிவிடப்படுகிறது (2-3 நாட்களுக்கு முன்னதாக).
• ஆரம்பகால தோற்றம் மற்றும் அதிக மகசூல் காரணமாக களைகளுடன் மிகவும் திறமையாக போட்டியிடும் வகையில் பயிர்கள் வளரச் செய்யலாம்.
• சீரான விதை தொகுப்பு மற்றும் முதிர்ச்சி.

பயிர் இரசாயனப் மற்றும் அளவு செய்முறை
கம்பு 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும்.
சோளம் 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து முடிவில் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொணர வேண்டும்.
பருத்தி 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
சூரியகாந்தி 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும்.
உளுந்து மற்றும்
பச்சை பயறு 100 ppm துத்தநாக சல்பேட்
100 ppm மாங்கனீசுசல்பேட் 1000 மில்லி கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
கேழ்வரகு 0.2 சதவீதம் சோடியம் குளோரைடு 2 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 700 மி.லி உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
நிலக்கடலை 0.5 சதவீதம் கால்சியம் குளோரைடு 5 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
துவரை 100 ppm துத்தநாக சல்பேட் 1 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
கொண்டைக் 1 சதவீதம் பொட்டாசியம் டை
கடலை ஹைட்ரசன் பாஸ்பேட் 10 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.

ஒருமித்த விதை நேர்த்தி (Designer Seed)

நெல்
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட்(2மிலி/கிலோ) + சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10கி/கிலோ)+ அசோபாஸ் (120கி/கிலோ)

உளுந்து
100 ppm துத்தநாக சல்பேட் கரைசலில் 3 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (4 கி/கிலோ)+ ரைசோபியம் (20கி/கிலோ)

சூரியகாந்தி
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + டிரைக்கோடெர்மா விரிடி (4 கி/கிலோ)+ அசோஸ்பைரிலம் (40கி/கிலோ)

பருத்தி
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + ூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10கி/கிலோ)+ அசோபாஸ் (120கி/கிலோ)

ஒருமித்த விதை நேர்த்தி

நன்மைகள்
• முளைப்புத்திறன் அதிகரிக்கின்றது.
• வீரியத்தன்மை அதிகரிக்கின்றது.
• செடிகளை இளம்பருவத்தில் தாக்கக்கூடிய சாறு உறிஞ்சும்பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ மற்றும் தத்துப்பூச்சிகளின் தாக்குதல்மிகவும் குறைவு. இதனால் பயிர்பாதுகாப்பு செலவு குறைக்கப்படுகிறது.
• பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றது.

கட்டுரையாளர்கள் : மோகன் கிருஷ்ணா சௌதிரி அ, கிருபாகரன் சி, இறுதியாண்டு இளங்கலை (மேதைமை) அறிவியல் வேளாண்மை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டம்.

Spread the love