August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வறண்ட வானிலை நீடிக்கும்

சென்னை, ஏப்.24

பெரும்பாலான மாவட்டங்களில், வருகின்ற 27ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மஹாராஷ்டிரா முதல் தமிழக தென் மாவட்டங்கள் வரை நிலவும்,

வளிமண்டல சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் மட்டும், இன்று முதல், 27ம் தேதி வரை, லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்,

மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில், காற்றில் ஒப்பு ஈரப்பதம், 90 சதவீதம் வரை உள்ளதால், அங்கும், 27 வரை வறண்ட வானிலையே நிலவும். மேலும், காற்றின் வெப்பநிலையும், இயல்பை விட, 5 டிகிரி

செல்ஷியஸ் வரை அதிகமாகும். காற்றின் வெப்பநிலை உயர்வால், சென்னையில் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாக இருக்கும். இயல்புக்கு மாறாக அதிகம் வியர்க்கும். இவ்வாறு

அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love